பட்டத்தரசியம்மன் கோவில் கும்பாபிஷேகம்
ADDED :3448 days ago
ஊட்டி: ஊட்டி எல்க்ஹில் குமரன் நகரில் பட்டத்தரசியம்மன் கோவில் கும்பாபிஷகேம் நடந்தது. ஊட்டி எல்க்ஹில் குமரன் நகர் பட்டத்தரசியம்மன் கோவிலில், புனரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மேலும் புதிய மண்டபமும் கட்டும் பணிகளும் நடந்து வந்தது. பணிகள் நிறைவடைந்ததை அடுத்து, மகா கும்பாபிஷேகம் நடந்தது. பின்பு, மூலவருக்கு அபிஷேக அலங்காரம், தசதானம், தசதரிசனம், மகா தீபாராதனை நடந்தது.