அமாவாசையை முன்னிட்டு ராமேஸ்வரத்தில் குவிந்த பக்தர்கள்!
ADDED :3755 days ago
ராமேஸ்வரம்: சித்திரை அமாவாசையை முன்னிட்டு, ராமேஸ்வரத்திற்கு ஏராளமான பக்தர்கள் வந்தனர். இன்று அதிகாலையில் ஸ்படிக லிங்க தரிசனத்திற்கு பின், அக்னி தீர்த்த கடலில் தீர்த்தமாடினர். பின், நீண்ட வரிசையில் காத்திருந்து, கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.