உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கிராம கோவில் பூசாரிகள் பொறுப்பாளர்கள் கூட்டம்

கிராம கோவில் பூசாரிகள் பொறுப்பாளர்கள் கூட்டம்

கோபி: கிராம கோவில் பூசாரிகள் பேரவை ஒன்றிய பொறுப்பாளர்கள் கூட்டம் கோபியில் நேற்று நடந்தது. கூட்டத்தில், பூசாரிகளுக்கு வழங்கப்படும் ஓய்வூதியம் ஆயிரம் ரூபாயை, 3,000 ரூபாயாக உயர்த்தி வழங்க வேண்டும். வயதான அனைத்து பூசாரிகளும் பலனடைய வகை செய்ய வேண்டும். அனைவருக்கும் நலவாரிய அடையாள அட்டை வழங்க வேண்டும். கிராம கோவில் பூசாரிகளுக்கு மாத சம்பளம், 5,000 ரூபாய் வழங்க வேண்டும். சிதிலமடைந்த கிராம கோவில்களை புணரமைத்து கும்பாபிஷகம் செய்ய, முழுமையாக நிதியுதவி வழங்க வேண்டும். என தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !