வடதிசையின் அதிபதி!
ADDED :3445 days ago
வாழ்நாள் முழுவதும் சிவபூஜையில் ஆழ்ந்திருந்தவர் விச்ரவசு மகரிஷி. பரத்வாஜரின் மகளான ஸ்வதேவியை மணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஆண்குழந்தை பிறந்தது. அவனுக்கு வைஸ்ரவணன்’ என்று பெயரிட்டனர். அப்பாவைப் போல பிள்ளையும் சிவபக்தனாக இருந்தான். தனக்கு தேவ பதவி வேண்டி, பிரம்மாவை நோக்கி தண்ணீர் மட்டுமே குடித்துக் கொண்டு தவமிருந்தான். பிரம்மா தோன்றவில்லை. பின் பட்டினியாகவே கிடந்து அவரது தரிசனத்தை வேண்டினான். இந்த கடும் தவத்தின் கனல் சத்தியலோகத்தில் இருந்த பிரம்மாவை எட்டியது. அவர் அவனுக்கு காட்சியளித்து குபேர பதவி அளித்தார். வடதிசைக்கு அதிபதியாக்கினார்.