உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருட சேவை மஹோத்ஸவம்; 5 கிராம பெருமாள் ஒன்றாக எழுந்தருளி அருள்பாலிப்பு

கருட சேவை மஹோத்ஸவம்; 5 கிராம பெருமாள் ஒன்றாக எழுந்தருளி அருள்பாலிப்பு

வந்தவாசி; வந்தவாசி அருகே, கருட சேவை உற்சவத்தையொட்டி,  5 கிராம பெருமாள் ஒன்றாக ஒழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெய்யார் கிராமத்தில், சீனிவாச பெருமாள் கோவிலில் கருட சேவை உற்சவம் நடந்தது. இதையொட்டி, சோகத்துார் யோக நரசிம்மர், பாப்பா நல்லுார் லஷ்மி நாராயண பெருமாள், நல்லுார் சுந்தரவரதராஜ பெருமாள், மூடூர் சீனிவாச பெருமாள் ஆகிய சுவாமிகளின் மூலவருக்கு சிறப்பு அபி‍ஷேகம் மற்றும் சிறப்பு பூஜை செய்யப்பட்டது. பின்பு உற்சவ பெருமாள், தெய்யார் கிராமத்தில், சீனிவாச பெருமாள் கோவில் முன்பு ஒன்றாக எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !