உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவை சிருங்கேரி சாரதா பீடம் சார்பில் சண்டி மகா ஹோமம்

கோவை சிருங்கேரி சாரதா பீடம் சார்பில் சண்டி மகா ஹோமம்

கோவை; ஸ்ரீ சிருங்கேரி ஜகத்குரு மகா சமஸ்தானம் தட்சிணா ம்நாய ஸ்ரீ சாரதா பீடம் சிருங்கேரி சிவகுரு மகாவிஷ்ணு சேத்திரத்தின் சார்பில் நட்சத்திர மண்டல ஸ்ரீ சண்டி மகா ஹோமம் கோவை தடாகம் ரோடு கே. என். ஜி. புதூர் பகுதியில் உள்ள மடத்தில் நடைபெற்று வருகிறது. கடந்த 3ம் தேதி முதல் தொடங்கி வருகின்ற 29ம் தேதி நிறைவு பெறுகிறது. இதில் தடைகள் விலகி நினைத்த காரியம் சித்தி பெறவும், சுப காரியங்கள் விரைவில் நடைபெறவும், வழக்கு விவகாரங்களில் வெற்றி பெற, கடன் தொல்லைகள் நீங்க ,செவ்வாய் தோஷம் நீங்கவும்,திருமணம் கைகூடவும்,வியாபாரம் தொழிலில் லாபம் பெறவும் , நாக தோஷம் மற்றும் நோய்களிலிருந்து விடுபடவும்,தம்பதிகளிடையே ஒற்றுமை கூடவும்,குழந்தை செல்வம் பெறவும்,பதினாறு செல்வமும் பெற்று குடும்ப ஒற்றுமை ஏற்படவும் இந்த ஹோமம் நடைபெறுவதாக கோவை ஸ்ரீ சிருங்கேரி சாரதா பீடம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு பயன்பெற கோவை சிருங்கேரி சாரதா பீடம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !