ஏலக்காய் இலவங்க மாலையில் பிரம்மாண்டமாக காட்சியளித்த பவழ வண்ணப் பெருமாள்
சென்னை; திருவொற்றியூர் காலடிப்பேட்டை கல்யாண வரதராஜ பெருமாள் கோவிலில் நான்காவது வார புரட்டாசி சனிக்கிழமை முன்னிட்டு நடைபெற்ற வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏலக்காய் இலவங்க மாலையில் பிரம்மாண்டமாக உற்சவர் ஸ்ரீ பவழ வண்ணப் பெருமாள் காட்சியளித்தார்.
சின்ன காஞ்சிபுரம் என்று அழைக்கப்படும் 400 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட காலடிப்பேட்டை ஸ்ரீ கல்யாண வரதராஜ பெருமாள் திருக்கோவிலில் புரட்டாசி மாதம் சனிக்கிழமை முன்னிட்டு வார வாரம் விசேஷ அலங்காரங்களில் பெருமாள் எழுந்தருள்வது பழக்கம் ஒவ்வொரு வாரமும் பிரம்மாண்ட மாலைகளில் அலங்கரித்து பொது மக்களுக்கு காட்சியளிக்கும் நிலையில் இன்று 40 கிலோ எடையிலான உயர்தர ஏலக்காய் மற்றும் லவங்கம் கொண்டு செய்யப்பட்ட தொடுக்கப்பட்ட பிரமாண்ட மாலை உற்சவர் ஸ்ரீதேவி பூதேவி சமேத பவழவண்ணப் பெருமாள் பிரமாண்டமாக காட்சியளித்தார். உற்சவர் ஸ்ரீ பெருந்தேவி தாயாருக்கு ஏலக்காய் ஆடை அணிவிக்கப்பட்டு காட்சியளித்தார். ஒவ்வொரு சனிக்கிழமையும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து சாமி தரிசனம் மேற்கொள்ளும் நிலையில் நான்கு வாரமும் விதவிதமான வகையில் பெருமாள் சன்னதியில் வண்ணக்கோலம் இடப்பட்டு வருகிறது இம்முறை தசாவதாரம் பெருமாள் பக்தை காருண்யா தனசேகர் என்பவரால் மிக நேர்த்தியாக வரையப்பட்டு பிரமாண்ட கோலம் போடப்பட்டது.