உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காட்டு மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

காட்டு மாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேக ஆண்டு விழா

அவிநாசி : அவிநாசி அருகே ராயம்பாளையம் ஸ்ரீகாட்டு மாரியம்மன் கோவிலில், ஒன்பதாவது கும்பாபி ஷேக ஆண்டு விழா நடைபெற்றது. கணபதி ஹோ மத்துடன் விழா துவங்கியது. செல்வ கணபதிக்கு கலசாபிஷேகம், மூல மந்திர ஜபம், வேத பாராயணம் ஆகியன நடைபெற்றன. 108 மூலிகையால் மூல மந்திர ஹோமம், ஒன்பது பசு மாடுகள் அழைத்து வரப்பட்டு, நவதுர்க்கை கோ பூஜை நடத்தப்பட்டன. அதன்பின், மாரியம்மனுக்கு மகாபிஷேகம், அலங்கார தீபாராதனைகள் நடைபெற்றன. விழாவையொட்டி, பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. பூஜையை, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவிலை சேர்ந்த விஜயகுமாரசிவம் தலைமையில், சிவாச்சார்யார்கள் மேற்கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !