அங்காளம்மன் கோவில் பெண்கள் தீச்சட்டி ஏந்தல்
ADDED :3444 days ago
உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டை சமயபுரத்து அங்காளம்மன் கோவிலில் ஊஞ்சல் உற்சவம் நடந்தது. சமயபுரத்துஅங்காளம் மன் கோவிலில் சித்திரை அமாவாசையையொட்டி ஊஞ்சல் உற்சவமும், தீச்சட்டி ஏந்தி வலம் வருதலும் நடந்தது. இதனையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தன. பின்னர், பெண்கள் வேண்டுதலுக்காக தீச்சட்டி ஏந்தி சென்றனர். சிறப்பு அலங்காரத்தில் அம்மன் வீதியுலா நடந்தது. அதனை தொடர்ந்து ஊஞ்சல் உற்சவம் நடந்தது.