உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / 11ம் தேதி சங்கர ஜெயந்தி விழா

11ம் தேதி சங்கர ஜெயந்தி விழா

தர்மபுரி: தர்மபுரி மாவட்ட பிராமணர் சங்கம் சார்பில், சங்கர ஜெயந்தி விழா, வரும், 11ம் தேதி நடக்கிறது. தர்மபுரி மாவட்ட பிராமணர் சங்கம் சார்பில், ஆண்டு தோறும் சங்கர ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தாண்டு கடந்த, 5ம் தேதி, கணபதி பூஜை, ஹோமத்துடன் சங்கர ஜெயந்தி விழா துவங்கியது. கடந்த, 6ம் தேதியில் இருந்து, தினமும் காலை, மாலையில் பூஜை மற்றும் பஜனை நடந்து வருகிறது. வரும், 11ம் தேதி, சங்கர ஜெயந்தி விழா, அருணாச்சல அய்யர் சத்திரத்தில் நடக்கிறது. இதையொட்டி, பிராமண சிறுவர்களுக்கு இலவச சமஸ்ட்டி உபநயனம் நடக்கிறது. விருப்பம் உள்ளவர்கள், சங்க தலைவர் சாய்ராமை, 9443162857 என்ற எண்ணிலும், மாநில துணை தலைவர் பாலசுப்பிரமணியத்தை, 9443619121 என்ற எண்ணிலும் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !