தேனுபுரீஸ்வரர் கோவில் பிரம்மோற்சவம் 12ல் துவக்கம்
ADDED :3439 days ago
மாடம்பாக்கம்: தாம்பரத்தை அடுத்த, மாடம்பாக்கம் தேனுபுரீஸ்வரர் கோவிலில், 11 நாட்கள் பிரம்மோற்சவம் விழா, மே, 12ல், அதிகாலை, 4:30 கொடியேற்றத்துடன் துவங்குகிறது. அன்று இரவு, 7:30 மணிக்கு, சோமாஸ்கந்தர் சுவாமி, ரிஷப வாகனத்தில், பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும்; இரவு, 8:30 மணிக்கு, தொட்டி உற்சவம் பஞ்சமூர்த்திகள் திருவீதி உலாவும் நடக்கிறது. ஏழாம் நாள், தேர் திருவிழா நடக்கிறது. மே, 22ல் பிரம்மோற்சவ விழா நிறைவு பெறுகிறது. விழாவையொட்டி, இன்று காலை, 8:00 மணிக்கு, கிராம தேவதை, வெங்கிளியம்மன் அபிஷேகமும்; இரவு, 7:00 மணிக்கு திருவீதி உலாவும் நடக்கிறது. நாளை, ஸ்ரீவிநாயகர் உற்சவத்தை ஒட்டி, காலை, 7:00 மணிக்கு, கணபதி ஹோமம், அபிஷேக அலங்காரம் மற்றும் தீபாராதனையும்; மாலை, 7:00 மணிக்கு, விநாயகர் மூஷிக வாகனத்தில், திருவீதி உலாவும் நடக்கிறது.