மாரியம்மன் கோவில் விழா: மே 18ல் கம்பம் புறப்படுதல்
ADDED :3439 days ago
கரூர்: கரூர், காந்திகிராமம் மகா மாரியம்மன் கோவில் விழா நேற்று முன்தினம் கம்பம் போடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, 13ம் தேதி பூத்தட்டு, 15ம் தேதி வடிசோறு மாவிளக்கு, 16ம் தேதி அக்னிசட்டி எடுத்தல், பொங்கல், மாவிளக்கு, 17ம் தேதி பால்குடம் எடுத்தல், மாலை அம்மன் திருவீதி உலா புறப்பாடு நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 18ம் தேதி இரவு, 7 மணிக்கு கம்பம் புறப்படுதல் விழா நடக்கிறது.