விநாயகர் கோவிலில் மகா கும்பாபிஷேகம்
களரம்பட்டி: களரம்பட்டி விநாயகர் கோவில் மகா கும்பாபிஷேகத்தில், ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். சேலம், களரம்பட்டியில் வலம்புரி விநாயகர், செல்வமாரியம்மன், சக்தி காளியம்மன், நவகிரகங்களுக்கு மகா கும்பாபிஷேக விழா, கடந்த, 22ம் தேதி முகூர்த்தகால் நடுதல் நிகழ்ச்சியுடன் துவங்கியது. பின், 29ல், முளைப்பாளிகை போடப்பட்டது. தொடர்ந்து, தினமும் காலை, மாலையில், சிறப்பு பூஜை நடந்தது. கடந்த, 7ம் தேதி முதல் கால பூஜையும், 8ம் தேதி கோபுர கலச ஸ்தாபனமும் செய்யப்பட்டது. நேற்று காலை, 6 மணிக்கு மேல் கணபதி பூஜை, தீபாராதனை செய்ததும், கடங்கள் புறப்பாடு நடந்தது. காலை, 9 மணிக்கு மேல், 10.30 மணிக்குள் கோபுர கலசம் மீது புனிதநீர் ஊற்றி, சிவஸ்ரீ சிவராஜ் சாஸ்திரிகள் குழுவினர், மகா கும்பாபிஷேகத்தை நடத்தினர். அதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.