உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வடகோட்டிப்பாக்கத்தில் கோவில் கும்பாபிஷேகம்

வடகோட்டிப்பாக்கத்தில் கோவில் கும்பாபிஷேகம்

மரக்காணம்: வடகோட்டிப்பாக்கம் கன்னியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடந்தது. விழாவையொட்டி நேற்று முன்தினம் காலை 7:30 மணிக்கு கோ பூஜை, நாடி சந்தானம், தத்துவர்ச்சனை, அஷ்டதிவ்ய ஹோமம், மூலிகை ஹோமங்கள், மஹாபூர்ணாஹுதி பூஜைகள் நடந்தது.

தொடர்ந்து 10:00 மணிக்கு கன்னியம்மன் கோவிலில் உள்ள நவகிரகங்களுக்கு முருக்கேரி ஸ்ரீலஸ்ரீ சீனுவாசசாமிகள் புனித நீர் ஊற்றி, கும்பாபிஷேகம் செய்து வைத்தார். ஒன்றிய சேர்மன் விஜய அர்ஜூணன், ஊராட்சி தலைவர் சிவகுமார் உள்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !