திருத்தணி அம்மன் கோவிலில் வில் வளைப்பு
ADDED :3439 days ago
திருத்தணி: திருத்தணி ஒன்றியம், குடிகுண்டா கிராமத்தில் உள்ள திரவுபதி அம்மன் கோவிலில், தீமிதி திருவிழா, கடந்த, 5ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தினமும், காலையில் மூலவர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், மதியம், மகாபாரத சொற்பொழிவு, இரவு, உற்சவர் அம்மன் வீதியுலா நடந்து வருகிறது.இந்நிலையில், இன்று, வில் வளைப்பு மற்றும் பக்காசூரன் வதம் நிகழ்ச்சி நடக்கிறது. மாலை, 6:00 மணிக்கு பக்காசூரன் ஊர்வலமாக கிராம வீதிகளில் வந்து, கோவில் வளாகத்தில் வதம் நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து, இரவுவில் வளைப்பு மகாபாரத நாடகம் நடைபெறுகிறது. நாளை (13ம் தேதி) பகல், 12:00 மணிக்கு, திரவுபதியம்மன் திருக்கல்யாணம் நிகழ்ச்சி, 16ம் தேதி அர்ச்சுனன் தபசு, 22ம் தேதி காலை, துரியோதனன் படுகளம், மாலையில் தீமிதி திருவிழாவும் நடக்கிறது.