காளையார்கோவிலில் வைகாசி விசாக விழா துவக்கம்
காளையார்கோவில்: காளையார்கோவில் சோமேஸ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோவில் வைகாசி விசாக விழா நேற்று துவங்கியது. காளையார்கோவில் சோமேஸ்வரர் சவுந்தரநாயகி அம்மன் கோவிலில், 2012 லிருந்து திருப்பணி நடந்தது. 2015ல் கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதனையடுத்து,வைகாசி விசாக விழா நேற்று இரவு 7 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வரர் பூஜையுடன் துவங்கியது.
மே12ம் தேதி காலை 10 மணிக்கு கொடியேற்றம், சுவாமி புறப்பாடு,15ம் தேதி அம்பாள் தபசுக்காட்சி, கதிர்குளித்தல் நிகழ்வும்,16ம்தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாணமும்,17ம் தேதி இரவு சமணர்கள் கழுவேற்றமும்,18ம்தேதி காலை 10.30 மணிக்கு பொய்ப்பிள்ளை மெய்ப்பிள்ளை ருத்ரதீர்த்தம்,19ம் தேதி இரவு நடராஜர் தரிசனம், 20ம் தேதி காலை 9மணிக்கு தேரோட்டம், 21ம் தேதி இரவு திருவிழா மற்றும் தெப்பமும் நடைபெறஉள்ளது. ஏற்பாடுகளை தேவஸ்தான மேலாளர் இளங்கோ,கண்காணிப்பாளர் ராஜேந்திரன், காளீஸ்வரக்குருக்கள் மற்றும் கிராம பொது மக்களும் செய்துள்ளனர்.