லட்சுமிக்கு பிடித்த பூக்கள்!
ADDED :3431 days ago
திருமகளாகிய லட்சுமியின் ஆட்சி உலகெங்கும் நடக்கிறது. இருக்கும் இடத்தைப் பொறுத்து அவளுக்கு ஒவ்வொரு பெயர் வழங்கப்படுகிறது. தேவலோகத்தில் சுவர்க்க லட்சுமி அதிகாரம் செலுத்துகிறாள். பூலோகத்தில் ஆட்சி அதிகாரம் மிக்க பதவியில் உள்ளவர்களிடம் ராஜ்ய லட்சுமியாக வீற்றிருக்கிறாள். குடியிருக்கும் வீட்டில் அவள் கிரக லட்சுமி எனப் பெயர் பெறுகிறாள். கோவில்களிலும், வீடுகளின் தலைவாசலிலும் யானை அபிஷேகம் செய்த நிலையில் கஜலட்சுமி எனப்படுகிறாள், பூஜையறையில் ஏற்றிய தீபத்தில் குடியிருப்பவள் தீப லட்சுமி. இவளுக்கு செந்தாமரை மீதும் மற்றும் மாலையில் மலரும் செவ்வந்திப் பூ மீதும் விருப்பம் அதிகம். பொன்னிறம் கொண்ட அவளுக்கு, மஞ்சள் நிற செவ்வந்திப்பூ சூட்டும் வழக்கம் ஆந்திர, கர்நாடக மக்களிடம் இருக்கிறது. செவ்வந்தியை சாமந்தி’ என்றும் அழைப்பர்.