உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சகோதரிகள் காட்டில் திருவிழா: 5000 பெண்கள் கொண்டாட்டம்!

சகோதரிகள் காட்டில் திருவிழா: 5000 பெண்கள் கொண்டாட்டம்!

ஆர்.கே.பேட்டை: கொள்ளாபுரியம்மன் சகோதரிகளான செல்லாலம்மன் மற்றும் நிப்புலபோலேரம்மன் கோவிலில் நேற்று, பொங்கல் திருவிழா கோலாகலமாக நடந்தது. 5,000 பெண்கள் கூடி, பொங்கல் வைத்தனர். பள்ளிப்பட்டு அடுத்த ஈச்சம்பாடி கிராமத்தின் எல்லையில் உள்ளது, செல்லாலம்மன் மற்றும் நிப்புலபோலேரம்மன் கோவில்கள். தனித்தனியே அமைந்துள்ள இந்த கோவில்களில் அருள்பாலிக்கும் இருவரும், கொள்ளாபுரியம்மனின் சகோதரிகள் என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். பல நுாற்றாண்டுகளை கடந்த இந்த கோவிலில், ஆண்டுதோறும் பொங்கல் திருவிழா  கொண்டாடப்படுவது வழக்கம். பள்ளிப்பட்டு நகரில் இருந்து நேற்று, 5,000 பெண்கள், இந்த கோவிலுக்கு ஊர்வலமாக வந்தனர். 2 கி.மீ., துாரம் பொங்கல் பானைகளை சுமந்து வந்து கோவில் வளாகத்தில் சிறப்பு வழிபாடுகளை நடத்தினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !