உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம்

காரைக்குடி கொப்புடையம்மன் கோயில் தேரோட்டம்

காரைக்குடி: காரைக்குடி கொப்புடைய நாயகி அம்மன் கோயில் செவ்வாய் திருவிழா கடந்த 10-ம் தேதி காப்பு கட்டுடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று நடந்தது. முன்னதாக காலை 10.45 மணிக்கு மேல், 11.30 மணிக்குள் அம்பாள் திருத்தேருக்கு எழுந்தருளல் நிகழ்ச்சியும், மாலை 6 மணிக்கு மேல் தேரோட்டமும் நடந்தது. இன்று,காலை 9 மணிக்கு காட்டம்மன் கோயிலிலிருந்து தேர் கொப்புடையம்மன் கோயிலுக்கு திரும்பும் நிகழ்ச்சி நடக்கிறது. நாளை மாலை 5 மணிக்கு சிறப்பு அபிஷேகம், இரவு 11 மணிக்கு தெப்பத்தில் அம்பாள் உலா நிகழ்ச்சியும் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் காலை வெள்ளி கேடயத்தில் அம்பாள் புறப்பாடும், இரவு 9 மணிக்கு வீதி உலாவும் நடந்தது. ஏற்பாடுகளை உதவி ஆணையர் ரோஜாலி சுமதா, செயல் அலுவலர் செல்வி செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !