திருப்பூர் வைகாசி விசாகத் தேர்த்திருவிழா: வீரராகவப் பெருமாள் வீதி உலா!
ADDED :3430 days ago
திருப்பூர்: திருப்பூர் ஸ்ரீவிஸ்வேஸ்வரர், ஸ்ரீவீரராகவப் பெருமாள் கோவில்களின், வைகாசி விசாகத் தேர்த்திருவிழா 14ம் தேதி துவங்கி சிறப்பாக நடைபெற்றுவருகிறது. தேர்த்திருவிழாவை ஒட்டி, ஸ்ரீதேவி, பூதேவி உடனமர் வீரராகவப் பெருமாள் வீதி உலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். 21, 22ல், தேரோட்டம் நடைபெற உள்ளது. 27ல் விடையாற்றி உற்சவத்துடன், தேர்த்திருவிழா நிறைவடைகிறது.