குமாரசக்கனாபுரத்தில் வரும் 8ம் தேதி கோயில் கும்பாபிஷேக விழா
விளாத்திகுளம் : விளாத்திகுளம் அருகே குமாரச்சக்கனாபுரத்தில் வரும் 8ம் தேதி செண்பக விநாயகர் மற்றும் துர்க்கையம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவும், 9ம் தேதி கருப்பசாமி கோயில் கும்பாபிஷேக விழாவும் நடக்கிறது. விளாத்திகுளம் அருகேயுள்ள எம்.குமாரசக்கனாபுரத்தில் அமைந்துள்ள செண்பக விநாயகர், துர்க்கை அம்மன் மற்றும் கருப்பசாமி கோயில் மஹாகும்பாபிஷேக விழா நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு விழா 7ம் தேதி காலை 6 மணிக்கு கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. பின்னர் நவக்கிரக ஹோமம், லட்சுமி பூஜை நடக்கிறது. மாலை 6 மணிக்கு வாஸ்துசாந்தி, பிரவேசபலி, காப்புகட்டுதல், கும்பபூஜை நடக்கிறது. இரவு 8 மணிக்கு முதல் காலயாகசாலை பூஜை, மங்கள இசை, வேதபாராயணம், பூர்ணாஹூதி, தீபாராதனை நடக்கிறது. இரவு 11 மணிக்கு யந்திரஸ்தாபனம், மருந்து சாத்துதல் நடக்கிறது. 8ம் தேதி காலை 5 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜையும், பின்னர் வேதபாராயணம் நடக்கிறது. 7.30 மணிக்கு ஸ்பரிஷாஹூதி, 8 மணிக்கு மேல் செண்பக விநாயகருக்கு மஹாகும்பாபிஷேகம் நடக்கிறது. 9 மணிக்கு துர்க்கை அம்மனுக்கு மஹாகும்பாபிஷேகம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து மஹாஅபிஷேகம் நடக்கிறது. அதே போல் கருப்பசாமி கோயில் கும்பாபிஷேக விழா வரும் 8ம் தேதி காலை 4 மணிக்கு மஹா கணபதி ஹோமத்துடன் துவங்குகிறது. பின்னர் முதல் கால யாகசாலை பூஜை, இரண்டாம் கால யாகசாலை பூஜை உட்பட சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு 9ம் தேதி 9.30 மணிக்கு மேல் மகாகும்பாபிஷேகம் நடக்கிறது. அதனைத் தொடர்ந்து அபிஷேகம் நடக்கிறது.