உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருச்செந்தூரில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்

திருச்செந்தூரில் விநாயகர் சிலைகள் விஜர்சனம்

திருச்செந்தூர் : திருச்செந்தூரில் நேற்று முன்தினம் நடந்த விநாயகர் சிலைகள் விஜர்சனத்தில் பாரதீய ஜனதா மாநில தலைவர் பொன்ராதாகிருஷ்ணன் கலந்து கொண்டார். விநாயகர்சதுர்த்தியை முன்னிட்டு ஆத்தூர், ஆறுமுகநேரி, குரும்பூர், சாத்தான்குளம், வெங்கடேஸ்வரபுரம், உடன்குடி போன்ற பகுதிகளில் வைக்கப்பட்டு இருந்த விநாயகர் சிலைகள் வாகனங்களில் ஊர்வலமாக திருச்செந்தூர் கடற்கரை வந்து சேர்ந்தது. பின்னர் விநாயகர் சிலைகள் கடலில் விஜர்சனம் செய்யப்பட்டது. இந்த நிகழ்ச்சிக்கு திருச்செந்தூர் அன்பு இல்ல நிர்வாகி நல்லதம்பி தலைமை வகித்தார். இந்து முன்னணி ஒன்றிய தலைவர் ஜெயசிங், ஒன்றிய செயலாளர் ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்து முன்னணி நகர தலைவர் அரிகிருஷ்ணன் வரவேற்றார். பாரதீய ஜனதா கட்சி மாநில தலைவர் பொன்ராதாகிருஷ்ணன், இந்து முன்னணி மாநில துணை தலைவர் ஜெயக்குமார், ஆர்.எஸ்.எஸ்.மாவட்ட தலைவர் ராமகிருஷ்ணன், இந்து முன்னணி தூத்துக்குடி தெற்கு மாவட்ட தலைவர் முருகேசன், தெற்கு மாவட்ட துணை தலைவர்கள் பொன்பரமேஸ்வரன், சுந்தரவேல், தெற்கு மாவட்ட பொது செயலாளர் சத்திவேலன், தெற்கு மாவட்ட செயலாளர்கள் சண்முகபார்த்திபன், சுப்புராஜ், பாரதீயஜனதா மாநில செயற்குழு உறுப்பினர் ராஜகண்ணன், தியாகி ஆறுமுகபாண்டியன் உட்பட்ட பலர் கலந்து கொண்டு பேசினார். திருச்செந்தூர் இந்து முன்னணி நகர பொதுச் செயலாளர் முத்துராஜ் நன்றி கூறினார். இந்த விநாயகர் சிலை விஜர்சனத்தில் 217 விநாயகர் சிலைகளும், வீடுகளில் வைத்து பூஜிக்கப்பட்ட 200 சிறு விநாயகர் சிலைகளும் ஊர்வலமாக கொண்டு வரப்பட்டு விஜர்சனம் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !