தாணுமாலயன் சுவாமி கோயிலில் ஆவணி திருவிழா துவக்கம்!
சுசீந்திரம் : சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலில் ஆவணித்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது.ஒன்பதாம் நாள் திருவிழாவன்று மாலை தேரோட்டம் நடக்கிறது. சுசீந்திரம் தாணுமாலயன்சுவாமி கோயிலில் மூலவருக்கு அடுத்த சன்னதியில் திருவேங்கட விண்ணவரம் பெருமாள் சுவாமியாக வீற்றிருக்கும் விஷ்ணு சுவாமிக்கு ஒவ்வொரு ஆண்டும் ஆவணி மாதத்தில் 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம். நேற்றுமுன்தினம் காலை 8.15 மணிக்கு பெருமாள் சுவாமியின் சன்னதியில் நேர் எதிரே உள்ள கொடிமரத்தில் கொடியேற்றத்துடன் ஆவணித் திருவிழா துவங்கியது. விழா நாட்களில் தினமும் சுவாமிக்கு சிறப்பு வழிபாடுகள்,வாகன பவனி ஆகியன நடக்கிறது. ஒன்பாதம் நாள் திருவிழாவான,வரும் 11ம் தேதி மாலை 4 மணிக்கு ஸ்ரீதேவி,பூதேவி சமேதராய் விஷ்ணு தேரில் எழுந்தருளி நான்கு ரத வீதிகள் வழியாக வலம் வருகிறார். மறுநாள் இரவு ஆராட்டு நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் நிற்வாகத்தினர் செய்து வருகின்றனர்.