கரிவரதராஜ பெருமாளுக்கு செப்., 8ல் கும்பாபிஷேகம்
வேலூர்: வேலூர் மாவட்டம், திருப்பத்தூர், சுந்தரம்பள்ளியில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீதேவி பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேகம், வரும் 8ம் தேதி நடக்கிறது. ஸ்ரீதேவி பூதேவி சமேத கரிவரதராஜ பெருமாள் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 7ம் தேதி மாலை 3 மணிக்கு, ஸ்வாமிகள் கரிவலம் வருதலுடன் துவங்குகிறது. மாலை 6 மணிக்கு, கணபதி பூஜை, கணபதி ஹோமம், கும்பஸ்தாபனம் போன்றவை நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு, கலசங்கள் யாகசாலை பிரவேசம், முதல்கால வேள்வி, திரவ்யாகுதி, மகாபூர்ணாகுதி போன்றவை நடக்கிறது. இரவு 12 மணிக்கு, சிலை வைத்தல், எந்திரஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்து சாத்துதல் நடக்கிறது. செப்டம்பர் 8ம் தேதி காலை 5.30 மணிக்கு, இரண்டாம் கால யாக பூஜை, வேதிகை பூஜை, மண்டபார்ச்சனையும், 7.25 மணிக்கு தம்பதிகள் மகாசங்கல்பமும், காலை 9 மணிக்கு மகா கும்பாபிஷேகமும் நடக்கிறது. பகல் 12 மணிக்கு, பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்படுகிறது. கும்பாபிஷேகத்தை தொடர்ந்து, 48 நாட்களுக்கு மண்டல பூஜை நடக்கிறது.