செங்கம் பெருமாள் கோவிலில் கருடசேவை விழா துவக்கம்
ADDED :3432 days ago
செங்கம்: திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் உள்ள, ருக்மணி சத்யபாமா உடனுறை வேணுகோபால பார்த்தசாரதி சுவாமி கோவிலில், பத்து நாள் கருடசேவை துவங்கியது. தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் வாணவேடிக்கையுடன் அன்ன வாகனத்தில் சுவாமி வீதி உலா நடந்தது. நேற்று சுவாமிக்கு திருக்கல்யாண உற்சவம், இரவு அனுமந்த வாகனத்தில் வீதி உலா நடந்தது. இன்று நாக வாகனத்தில் சுவாமி வீதி உலாவும், நாளை காலையில் கருடசேவை நடைபெறுகிறது. அன்று சுவாமி சிறப்பு அலங்காரத்தில், போளூர் சாலையில் உள்ள கங்கைகொண்டான் மண்டபத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார். ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து நேர்த்திக்கடன் செலுத்தி, சுவாமியை வழிபடுவர். இதற்கான ஏற்பாடுகளை இந்துசமய அறநிலையத் துறை செய்து வருகிறது.