அந்திலி கோவிலில் நரசிம்ம ஜெயந்தி விழா
ADDED :3432 days ago
திருக்கோவிலுார்: திருக்கோவிலுார், அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில், நரசிம்ம ஜெயந்தி விழா நடக்கிறது. திருக்கோவிலுார் அடுத்த அந்திலி லட்சுமி நரசிம்மர் கோவிலில், நரசிம்ம ஜெயந்தி விழா, 20 மற்றும் 21ம் தேதிகளில் நடக்கிறது. முதல்நாள் காலை 9:00 மணிக்கு வேதவிற்பன்னர்கள் மூலம் கலச ஸ்தாபனம், லஷ்மி‚ சுதர்சன‚ நரசிம்ம, ஆஞ்சநேய ஹோமங்கள் நடந்தது. பகல் 11:00 மணிக்கு லஷ்மி நரசிம்மருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனையும், மாலை 5:00 மணிக்கு வேத பாராயணம் நடக்கிறது. தொடர்ந்து 21ம் தேதி காலை 8:00 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு திருமஞ்சனம், 9:00 மணிக்கு திருக்கல்யாணம், தீபாராதனை நடக்கிறது.