உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / வெயிலுகந்தம்மன் கோயில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

வெயிலுகந்தம்மன் கோயில் விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

விருதுநகர்: விருதுநகர் பராசக்தி வெயிலுகந்தம்மன் கோயில் பொங்கல் திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. மே 24ல் பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. கொடியேற்றத்துடன் துவங்கிய விழாவில் கொடி மரத்தில் கொடியேற்றப்பட்டு, மரத்திற்கு சந்தனம், பன்னீர், பால் போன்றவைகளால் அபிஷேகம் சிறப்பு பூஜைகள் நடந்தது. நேற்று முன்தினம் இரவு 9 மணிக்கு மண்டபத்தில் பூஜையுடன் அம்பிகை வெள்ளி ரிஷப வாகனத்தில் நகர் வலம் நடந்தது. இவ்விழாவில் இசைநிகழ்ச்சியும் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான பொங்கல் விழா மே 24 ல் நடக்கிறது. அன்று இரவு 8 மணிக்கு அம்பிகை தங்க குதிரை வாகனத்தில் அம்மன் நகர் வலம் வருதல் நடக்கிறது. மே 25 ல் பக்தர்கள் கயிறு குத்து, அக்னி சட்டி ஏந்துதல், கரகம் எடுத்தல், ரதம் இழுத்தல், வேடங்கள் போட்டு நேர்த்தி கடன் செலுத்துதல் நடக்கிறது. மே 26ல் மாலை 4 மணிக்கு வெயிலுகந்தம்மன், மாரியம்மன் தேரில் எழுந்தருளி தேரோட்டம் நடக்கிறது. மறுநாள் காலை 7 மணிக்கு தேர்நிலை வந்து சேருதலும், மறுநாள் மஞ்சள் நீராட்டும் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !