உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்தனர்!

கடலுார் பாடலீஸ்வரர் கோவிலில் தேரோட்டம்: பக்தர்கள் வடம் பிடித்தனர்!

கடலுார்: பாடலீஸ்வரர் கோவிலில் நேற்று நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம் பிடித்து இழுத்தனர். பாடல் பெற்ற ஸ்தலமான கடலுார், பாடலீஸ்வரர் கோவிலில் வைகாசி பெருவிழா கடந்த 12ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத்  தொடர்ந்து தினமும் சிறப்பு அபிஷேகம், தீபாராதனை காலை மற்றும் மாலை சுவாமி வீதியுலா நடைபெற்றது. அதில் கடந்த 16ம் தேதி இரவு தெரு வடைச்சானிலும், 17ம் தேதி வெள்ளிரதத்தில் வீதியுலாவும், 18ம் தேதி திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. முக்கிய திருவிழாவான தேர் திரு விழா நேற்று நடைபெற்றது. அதனையொட்டி காலை 5:00 மணிக்கு பாடலீஸ்வரர், பெரியநாயகிக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது.  தொடர்ந்து யாகசாலை பூஜை, பஞ்சமூர்த்தி அலங்காரம், தீபாராதனையைத் தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் கோவில் முன்மண்டபத்தில் எழுந்தருளிய தும் சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந்து மேளதாளம், பஞ்சவாத்தியங்கள் முழங்க சுவாமி தேரடிக்கு வந்து, அலங்கரித்த தேரில் எழுந்தருளினார். ய õத்ராதானம் மற்றும் தீபாராதனையைத் தொடர்ந்து பக்தர்கள் பாடலீஸ்வரா, பரமேஸ்வரா என கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர்  முக்கிய வீதிகள் வழியாக பகல் 1:00 மணிக்கு மீண்டும் தேரடியை வந்தடைந்தது. மாலை சுவாமி தேரிலிருந்து இறங்கி, திருஞானசம்பந்தர்  சன்னதியில் மண்டகபடி பூஜை நடைபெற்றது. பின்னர் சுவாமி கோவிலை வந்தடைந்தார். அதனைத் தொடர்ந்து கோவிலில் இருந்து நடராஜர், சி வகாமசுந்தரி தேரடிக்கு எழுந்தருளி தேரை தகனம் செய்யும் ஐதீக உற்சவம் நடைபெற்றது.  இன்று இரவு முத்துப்பல்லக்கு உற்சவம் நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !