உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / திருப்பரங்குன்றம் வைகாசி விசாக பால்குட விழா கோலாகலம்!

திருப்பரங்குன்றம் வைகாசி விசாக பால்குட விழா கோலாகலம்!

திருப்பரங்குன்றம்: திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் வைகாசி விசாக பால்குட திருவிழாவை முன்னிட்டு, அதிகாலை 4.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்பட்டு பக்தர்கள் சுவாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர்.

இன்று (மே 21) விசாகத்தை முன்னிட்டு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பால்குடங்களுடன் கோயிலில் குவிந்து வருகின்றனர். பக்தர்கள் கொண்டு வரும் பால் சண்முகர், வள்ளி, தெய்வானைக்கு அபிஷேகம் செய்யப்பட்டு, அப்பாலை பக்தர்களுக்கு வினியோகிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.விபத்துக்களை தவிர்க்கும் பொருட்டு தகர பந்தல் அமைக்கப்பட்டுள்ள மண்டபங்களில் மட்டுமே சுவாமி எழுந்தருளி தீபாராதனை நடைபெறும் என கோயில் துணை கமிஷனர் செல்லத்துரை தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !