உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்

சிங்கிரிகுடி லட்சுமி நரசிம்மர் கோவில் தேரோட்டம்

கடலுார்: சிங்கிரிகுடி, லட்சுமி நரசிம்மர் கோவிலில் தேரோட்டம் நடந்தது. கடலுார் அடுத்த சிங்கிரிகுடி கிராமத்தில் உள்ள, லட்சுமி  நரசிம்ம சுவாமி  கோவிலில் பிரம்மோற்சவ விழா, கடந்த 12ம் தேதி,  கொடியேற்றத்துடன் துவங்கியது. அதனைத் தொடர்ந்து, தினமும் சுவாமிக்கு  சிறப்பு பூஜை  மற்றும் வீதியுலா நடந்து வந்தது. முக்கிய விழாவான தேரோட்டம், நேற்று நடந்தது. அதிகாலையில்,  உற்சவருக்கு சிறப்பு பூஜை நடந்தது. தொடர்ந் து, உற்சவரை அலங்கரித்து,  கோவிலை வலம் வந்து, அலங்கரிக்கப்பட்ட தேரில் எழுந்தருளினார். கூடியிருந்த பக்தர்கள், கோவிந்தா... கோவிந்தா...  என,  கோஷமிட்டபடி தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் முக்கிய வீதிகள் வழியாக  சென்று மீண்டும் தேரடியை வந்தடைந்தது. மாலையில், ÷ தரடி உற்சவமும், இரவு, தீர்த்தவாரி அவரோகணமும்  நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !