காட்டுப்பரூர் கோவிலில் நாளை தேர் திருவிழா
ADDED :3432 days ago
மங்கலம்பேட்டை: காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவில், நாளை தேரோட்டம் நடக்கிறது. மங்கலம்பேட்டை அடுத்த காட்டுப்பரூர் ஆதி÷ கசவ பெருமாள் கோவில் தேர் திருவிழா கடந்த 14ம் தேதி காப்பு கட்டும் நிகழ்ச்சியுடன் துவங்கியது. தொடர்ந்து, 15ம் தேதி முதல் 21ம் தேதி வரை தினசரி காலை 7:00 மணியளவில் பெருமாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, இரவு அலங்கரித்த வாகனத்தில் சுவாமி வீதியுலா நடக்கிறது. நேற்று இரவு 7:30 மணிக்கு திருக்கல்யாண உற்சவம், இன்று மாலை 6:00 மணிக்கு பாரிவேட்டை, நாளை (22ம் தேதி) முக்கிய நிகழ்வாக தேரோட்டம், மாலை தீர்த்தவாரி, இரவு சுவாமி வீதியுலா நடக்கிறது.