காமாட்சியம்மன் வைகாசி திருவிழா: அலகு குத்தி தேர் இழுத்த பக்தர்கள்!
ADDED :3431 days ago
புன்செய்புளியம்பட்டி: புன்செய்புளியம்பட்டி நல்லகாளிபாளையம் காமாட்சியம்மன் கோவில் திருவிழா, 16ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. கடந்த, 19ம் தேதி இரவு செல்வ விநாயகர் கோவிலில் இருந்து படைக்கலத்துடன் தீர்த்தகுடம் எடுத்து அம்மை அழைத்து வரப்பட்டது. காமாட்சியம்மன்-ஏகம்பரநாதர் திருக்கல்யாண உற்சவம் நேற்று காலை நடந்தது. இதை தொடர்ந்து ஏராளமான பெண்கள், பொங்கல் வைத்து, காமாட்சியம்மனுக்கு படையலிட்டனர். பின்னர் பக்தர்கள், அலகு குத்தி தேர் இழுத்தனர். இரவு, காமாட்சியம்மன் உற்சவர் திருவீதி உலா நடைபெற்றது. இன்று (21ம் தேதி) காலை மஞ்சள் நீராட்டு விழா நடக்கிறது.