உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

மாரியம்மன் கோவில் தேர் திருவிழா

எருமப்பட்டி: எருமப்பட்டி அருகே, முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நடக்கிறது. சேந்தமங்கலம் தாலுகா, எருமப்பட்டி அடுத்த, கைகாட்டியில் முத்துமாரியம்மன் கோவில் தேர்திருவிழா நடந்து வருகிறது. கடந்த, 10ம் தேதி, மோகனூர் காவிரியாற்றில் இருந்து புனிதநீர் எடுத்து வரப்பட்டு காப்பு கட்டுதலுடன் திருவிழா துவங்கியது. நாள்தோறும், மாரியம்மனுக்கு அபிஷேகமும், ஆராதனைகளும் நடக்கின்றன. தொடர்ந்து, நாளை மறுநாள் (23ம் தேதி) காலை மாவிளக்கு பூஜையும், மதியம் அக்னிசட்டி எடுத்தலும், மாலை அலகு குத்துதல் நிகழ்ச்சியும் நடக்கிறது. மறுநாள் (24ம் தேதி) பொங்கல் வைத்தல், கிடாவெட்டு நிகழ்ச்சி நடக்கிறது. வரும், 25ம் தேதி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் நகர்வலம் வருகிறார். மாலை மஞ்சள் நீராட்டு விழாவுடன், கம்பம் குடிவிடும் நிகழ்ச்சி நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !