அரங்கநாதபெருமாள் கோவிலில் வைகாசி விசாக தேர் திருவிழா
திட்டக்குடி: திட்டக்குடி வதிட்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாதபெருமாள் கோவில் வைகாசி பிரம்மோற்சவ தேர் திருவிழாவில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று வடம்பிடித்தனர். திட்டக்குடி வதிட்டபுரம் திருமகிழ்ந்தவல்லி சமேத அரங்கநாதபெருமாள் கோவில் வைகாசி பி ரம்மோற்சவ விழா கடந்த 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. தொடர்ந்து தினசரி பெருமாள் மற்றும் தாயாருக்கு சிறப்பு அபிஷேக ங்கள், ஆராதனைகள் நடந்தது. பெருமாள் தாயாருடன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். கடந்த 19ம் தேதி மாலை 5மணிக்கு சுவாமி திருக்கல்யாணம் நடந்தது. நேற்று முன்தினம் மாலை விசாக திருத்தேர் விழா நடந்தது. பெருமாள், தாயாருடன் திருத்தேரில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து தேர் இழுத்தனர். தொடர்ந்து நேற்று காலை 8:00 மணிக்கு மகாஅபிஷேகமும், தீர்த்தவாரி நடந்தது. மாலை 3:00 மணிக்கு துவாதச ஆராதனம், புஷ்பயாகம் நடந்தது.