உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தேவி மாரியம்மன் கோவிலில் 1008 குடம் நீர், பாலபிஷேகம்

தேவி மாரியம்மன் கோவிலில் 1008 குடம் நீர், பாலபிஷேகம்

மந்தாரக்குப்பம்: வைகாசி விசாகத்தையொட்டி, மந்தாரக்குப்பம் தேவி மாரியம்மன் கோவிலில் 1008 குடம் நீர் மற்றும் பாலாபிஷேகம் நடந்தது.  வைகாசி விசாகம், அக்னி நட்சத்திர தோஷ நிவர்த்தியையொட்டி காலை 6:00 முதல் மதியம் 12:00 மணி வரை அம்மனுக்கு 1008 குடம் நீர்,  பாலாபிஷேகம் நடந்தது. பக்தர்கள் அனைவரும் நேரடியாக அபிஷேகம் செய்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.  தொடர்ந்து அம்மனுக்கு பால், தயிர்,  சந்தனம், இளநீர், பன்னீர், பஞ்சாமிர்தம், தேன் உள்ளிட்ட பொருட்களால் சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பக்தர்களுக்கு மஞ்சள், குங்குமம்  பிரசாதம் வழங்கப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !