வேணுகோபால சுவாமி கோவிலில் கருட சேவை உற்சவம்
ADDED :3425 days ago
நெல்லிக்குப்பம்: நெல்லிக்குப்பம் வேணுகோபால சுவாமி கோவிலில் கருடசேவை உற்சவம் நடந்தது. நெல்லிக்குப்பம் பாமா ருக்குமணி சமேத வேணுகோபால சுவாமி கோவிலில் வைகாசி விசாகத்தை முன்னிட்டு சிறப்பு திருமஞ்சனம், தீபாராதனை நடந்தது. கருட வாகனத்தில் வேணு÷ காபால சுவாமி சிறப்பு அலங்காரத்தில் வீதிஉலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.