அர்த்தநாரீஸ்வரர் கோவிலில் வைகாசி விசாக தேரோட்டம்
ADDED :3425 days ago
திருச்செங்கோடு: திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் வைகாசி விசாகத் தேரோட்ட விழா நடந்தது. திருச்செங்கோடு, அர்த்தநாரீஸ்வர் திருக்கோவில் வைகாசி விசாகத் தேர்திருவிழா, கடந்த, 13ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. விழாவின், 10வது நாள் நிகழ்ச்சியான திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சியை, நாமக்கல் மாவட்ட கலெக்டர் தட்சிணாமூர்த்தி, வடம்பிடித்து துவக்கி வைத்தார். திருச்செங்கோடு ஆர்.டி.ஓ., மகாத்மா, டி.எஸ்.பி., சுரேஷ், திருக்கோவில் உதவி ஆணையர் சூரியநாராயணன் உள்பட பலர் பங்கேற்றனர்.