நாசரேத் ஆரோக்கியமாதா ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்!
நாசரேத் : நாசரேத் -மாதாவனம் அன்னை வேளாங்கன்னி ஆரோக்கியமாதா திருத்தல திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது. நாசரேத்-மாதாவனம் அன்னை வேளாங்கன்னி ஆரோக்கிய மாதா திருத்தல விழா கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா தொடர்ந்து வரும் 8ம் தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. முதல் நாள் மாலை திருப்பலியும், கொடியேற்றமும் பிரகாசபுரம் பங்குத்தந்தை ராஜா தலைமையில் தைலாபுரம் பங்குத்தந்தை அமலன் முன்னிலையில் ஏரல் ஒத்தாசை மாதா ஆலயப் பங்குத் தந்தை பீட்டர் கொடியேற்றி வைத்தார். தினமும் திருவிழா சிறப்பு ஜெபமும், திருப்பலியும் நடக்கிறது. 9ம் திருநாளான நாளை (7ம் தேதி) மாலையில் சிறப்பு மாலை ஆராதனை சாத்தான்குளம் மறைமாவட்ட முதன்மைக்குரு எர்வர்ட் ஜே அடிகள் தலைமையில் நடக்கிறது. முடிவில் சமபந்தி விருந்து நடக்கிறது. 10ம் திருவிழா காலையில் திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலி சாத்தான்குளம் மறைமாவட்ட முதன்மைக்குரு எர்வர்ட் ஜே அடிகள் தலைமையில் நடக்கிறது. மாலையில் ஜெபமாலையுடன் சப்பரபவனி, நற்கருணை ஆசீர் நடக்கிறது. ஏற்பாடுகளை பங்கு தந்தை ராஜா தலைமையில் பங்கு மக்கள், ஆலயக் கமிட்டியினர்,இறைமக்கள் இராஜாவூர் ராஜேந்திரன், அமலன், மோகன் ஆகியோர் செய்துள்ளனர்.