பகவதியம்மன் கோவில் கொடியேற்றம்
ADDED :5193 days ago
சூலூர்: சூலூர், கண்ணம்பாளையத்தில் உள்ள பகவதியம்மன் கோவில் முதலாம் ஆண்டு விழா பூஜைகள் நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கின; வரும் 12ம் தேதி வரை நடக்கிறது. நேற்று காலை துவங்கிய கலசாபிஷேக பூஜையை, கேரள மாநிலம் சக்குளத்து பகவதியம்மன் கோவில் தந்திரி கோவிந்தன் நம்பூதிரி தலைமையில் ராதாகிருஷ்ணன், மணிக்குட்டன் ஆகியோர் செய்தனர். தினமும் காலை, மாலை அம்மனுக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடக்கின்றன. வரும் 11ம்தேதி மாலை 7.30 மணிக்கு அம்மனுக்கு ஆராட்டு உற்சவம் நடக்கிறது. ஆர்.வி.எஸ்., அறக்கட்டளை அறங்காவலர் பத்மாவதி, கோவில் செயல் அலுவலர் தங்கவேலு, ராஜேந்திரன் உள்ளிட்டோர் பூஜையில் பங்கேற்றனர்.