ப.வில்லியனூர் கோவிலில் வரும் 9ம் தேதி சிரவண தீபம்
ADDED :5143 days ago
விழுப்புரம்: வாணியம்பாளையம் அடுத்த ப.வில்லியனூர் பெருமாள் கோவிலில் வரும் 9ம் தேதி சிரவண தீபம் ஏற்றப்படுகிறது. வாணியம்பாளையம் அடுத்த ப.வில்லியனூர் லட்சுமி நாராயண பெரு மாள் கோவிலில் (7ம் தேதி) பூராடம் நட்சத் திரத்தையொட்டி காலை 10 மணிக்கு சிறப்பு அபி ஷேகம், திருமஞ்சனம் நடக்கிறது. பின்னர் 9ம் தேதி திருவோண நட்சத் திரத்தையொட்டி சிறப்பு திருமஞ்சனம் நடக்கிறது. காலை 6 மணிக்கு விமான சேவை, வீதியுலா, மதியம் 1 மணிக்கு அலங்கார திருமஞ்சனம் நடக்கிறது. தொடர்ந்து மாலை 4.30 மணிக்கு சிரவண தீபம் ஏற்றப்படுகிறது.