உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம்

செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில் பவுர்ணமி ஜோதி தரிசனம்

செஞ்சி: செல்லபிராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில், பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி தரிசனம் நடந்தது. செஞ்சி அருகே உள்ள செல்லபி ராட்டி லலிதா செல்வாம்பிகை கோவிலில், நேற்று முன்தினம் இரவு, பவுர்ணமியை முன்னிட்டு ஜோதி தரிசனம் நடந்தது. இதை முன்னிட்டு  அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்தனர்.  மாலை 5:00 மணிக்கு சிறப்பு ஹோமம் நடந்தது. இதில் லலிதா சகஸ்ரநாமம், லலிதா  திரிசதி, லலிதா செல்வாம்பிகை கவசம்,  விசேஷ திரவிய ஹோமம், லலிதா செல்வாம்பிகை 1008 மந்திரங்கள் படிக்கப்பட்டன. இரவு 9:00 மணிக்கு  ஹோமத்தில் வைக்கப்பட்ட கலச நீர் கொண்டு அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.  தொடர்ந்து மகா புஷ்பாஞ்சலி நடந்தது. இரவு 12:00 மணிக்கு  ஜோதி தரிசனம் நடந்தது. பக்தர்களுக்கு பிரசாத விநியோகம் செய்தனர்.  இதில் அறங்காவலர் கன்னியப்பன், கிராம பொதுமக்கள் மற்றும் கோவில்  நிர்வாக குழுவினர் கலந்து கொண்டனர். பூஜைகளை ஈஸ்வர சிவன் செய்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !