உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பி.சுக்காம்பட்டி மாரியம்மன் கோவில் விழா கோலாகலம்

பி.சுக்காம்பட்டி மாரியம்மன் கோவில் விழா கோலாகலம்

கடவூர்: பி.சுக்காம்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழா கோலாகலமாக நடக்கிறது. கடவூர் தாலுகா, பி.சுக்காம்பட்டி காளியம்மன் கோவில் வைகாசி திருவிழா இன்று துவங்குகிறது. திருவிழாவை முன்னிட்டு இன்று, காலை, 10 மணிக்கு காவிரி ஆற்றில் இருந்து தீர்த்தம் எடுத்து வருதல் நடக்கிறது. நாளை அம்மனை சுற்றி வருதல், பொங்கல் வைத்து, மாவிளக்கு எடுத்தலும், அன்னதானமும், 26ம் தேதி அலகு குத்துதல், அக்னி சட்டி எடுத்தல், மாலையில், அம்மனுக்கு கிடா வெட்டுதல் மற்றும் மஞ்சள் நீராட்டு விழா, அம்மன் ஆற்றுக்கு சென்றடைதல் நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை ஊர்பொது மக்கள் செய்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !