அம்பகரத்துார் கோவிலில் புஷ்ப பல்லக்கில் சுவாமி வீதியுலா!
ADDED :3697 days ago
காரைக்கால்: அம்பகரத்துார் பத்ரகாளியம்மன் கோவிலில் மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா நடந்தது. திருநள்ளார் அடுத்த அம்பகரத்தூரில் உள்ள பிரசித்தி பெற்ற பத்ரகாளியம்மன் கோயிலில் மகிஷ சம்ஹார நினைவுப் பெருவிழா, கடந்த 5ம் தேதி அபிஷேக ஆராதனை மற்றும் காப்புக் கட்டுதலுடன் தொடங்கியது. தினமும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடந்தது. முக்கிய நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் பத்ர காளியம்மன் புஷ்ப பல்லக்கில் வீதியுலா, இரவு மகிஷ சம்ஹார நினைவு பெருவிழா நிகழ்ச்சி நடந்தது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாக அதிகாரி பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.