உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சேவுகப் பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி திருவிழா சப்தாவர்ணம்

சேவுகப் பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி திருவிழா சப்தாவர்ணம்

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப் பெருமாள் அய்யனார் கோவில் வைகாசி விசாக திருவிழா சப்தாவர்ணம் நேற்று நடந்தது. இதில் சிவகங்கை மட்டுமின்றி மதுரை, திண்டுக்கல், புதுக்கோட்டை, திருச்சி மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்தனர். அவர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். கிடா வெட்டி பக்தர்களுக்கு விருந்தளிக்கப்பட்டன. பூரணா தேவி,புஷ்கலாதேவியுடன் சேவுகப்பெருமாள் சுவாமி தீர்த்தவாரி, மஞ்சள் நீராட்டு விழா நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !