உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பாகூர் மூலநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

பாகூர் மூலநாதர் கோவிலில் சிறப்பு அபிஷேகம்

பாகூர்: பாகூர் மூலநாதர் சுவாமி கோவிலில், சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, இன்று (25ம் தேதி) பால விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. பாகூரில், 1400 ஆண்டுகள் பழமை வாய்ந்த, வேதாம்பிகை சமேத மூலநாதர் சுவாமி கோவில் உள்ளது. இங்கு, சங்கடஹர சதுர்த்தியை முன்னிட்டு, இன்று (25ம் தேதி) பால விநாயகருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. காலை 9:00 மணிக்கு, வேதாம்பிகை, மூலநாதர், முருகர், சண்டிகேஸ்வரர் உள்ளிட்டோருக்கு சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, இரவு 7:00 மணிக்கு, கோவிலின் மூலவர் கோபுர மண்டபத்தின் வெளிப்புற சுவரில், தெற்கு திசை பார்த்து அருள்பாலிக்கும் பால விநாயகருக்கு, பால், தேன் உள்ளிட்டவற்றால், சிறப்பு அபிஷேகம் செய்து, பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்படும். குழந்தைப்பேறு இல்லாத தம்பதிகள், பூஜையில் பங்கேற்று பால விநாயகருக்கு தேன்  அபிஷேகம் செய்து வழிபட்டால், அவர்களின் வேண்டுதல் நிறைவேறும் என்பது ஐதீகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !