உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பூசாரிகள் நல சங்கத்தினர் கோவிலில் சிறப்பு பூஜை

பூசாரிகள் நல சங்கத்தினர் கோவிலில் சிறப்பு பூஜை

கள்ளக்குறிச்சி: தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச் சங்கம் சார்பில் முதல்வராக பதவியேற்ற ஜெ.,விற்கு வாழ்த்து தெரிவித்து சிறப்பு பூஜை செய்தனர். தமிழக முதல்வராக ஜெ., மீண்டும் நேற்று பதவியேற்றார். இதையடுத்து, தமிழ்நாடு கோவில் பூசாரிகள் நலச்சங்கம் சார்பில் முதல்வராக பதவியேற்கும் ஜெ.வுக்கு வாழ்த்து தெரிவித்து கள்ளக்குறிச்சி அடுத்த சித்தலுார் அங்காளபரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் செய்தனர். அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் செய்து வைக்கப்பட்டு, ஆராதனைகள் நடந்தது. கோவில் பூசாரிகள் நலச்சங்க மாவட்ட தலை வர் பழனி, செயலாளர் ராமலிங்கம், ஆலோசனைக் குழு உறுப்பினர் கிருபானந்தம், ஒன்றிய செயலாளர் ஜெயராமன், தலைவர் மாரிமுத்து, சின்னசேலம் ஒன்றிய தலைவர் செல்வம் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !