உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / எதிலும் முந்தச்செய்யும் முந்தி முந்தி விநாயகர்!

எதிலும் முந்தச்செய்யும் முந்தி முந்தி விநாயகர்!

ஒரு செயலை செய்ய முடிவெடுத்தால், அது அதிவிரைவில் முடிய வேண்டும் என ஆசைப்படுகிறோம். ஒரு மாணவன்  இந்த கடினமான பாடம், பத்தே நிமிடத்தில் என் மனதில் பதிந்து விடாதா? என எதிர்பார்க்கிறான். இப்படி எல்லாருக்கும் ஏதோ ஒரு விதத்தில் அவசரம் இருக்கிறது. ஆன்மிகவாதிகள் கைலாயத்தை அடைவதில் நான் முந்தி,நீ முந்தி என போட்டியிடுகின்றனர். அவ்வை, சுந்தரர், சேரமான் பெருமாள் ஆகியோர் கைலாயத்தை அடைய ஆசைப்பட்டனர். சுந்தரர் யானையிடம், சேரமான் பெருமாள் குதிரையிலும் சென்றனர். யானையை குதிரை முந்தியது. ஆனால், வாகனம் ஏதுமில்லாத அவ்வை இவர்களுக்கு முன்னதாகவே கைலாயம் போய்விட்டாள்.தன்னைப் பாடும்படி விநாயகர் அவ்வையிடம் கேட்டார். ஐயனே! நீ இருக்குமிடமே கைலாயம் போன்றது தான். இப்போது, கைலாயத்தில் நின்றபடியே பாடுவதாக உணர்கிறேன், என்று சொல்லி, சீதக்களப செந்தாமரைப்பூம் என்று அகவல் பாடி முடித்தாள். விநாயகருக்கு ஏக சந்தோஷம். தும்பிக்கையால் அப்படியே மேலே துõக்கி கைலாயத்தில்கொண்டு சேர்த்து விட்டார். ஆக, விநாயகரை வணங்குபவர்கள் எதையும் முந்திச்செய்யும் ஆற்றல் பெறுவர். முந்தி முந்தி விநாயகனே என்று பாடுவது கூட இதனால் தான்!


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !