உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / மங்கலம்பேட்டை கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

மங்கலம்பேட்டை கோவிலில் நாளை கும்பாபிஷேகம்

மங்கலம்பேட்டை: மங்கலம்பேட்டை மாரியம்மன் கோவில் நாளை (26ம் தேதி) கும்பாபிஷேகம் நடக்கிறது. இதையொட்டி நேற்று 24ம் தேதி மாலை 6:00 மணியளவில் சிறப்பு யாக சாலை பூஜை நடந்தது. இன்று (25ம் தேதி) காலை 7:00 மணிக்கு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை, மாலை 3:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடக்கிறது. நாளை (26ம் தேதி) கும்பாபிஷேகத்தையொட்டி காலை 7:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடக்கிறது. தொடர்ந்து காலை 9:00 மணிக்கு மாரியம்மன், விநாயகர், ஆத்மலிங்கம், ஆஞ்சநேயர் கோவில் கோபுரகலசத்தில் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடக்கிறது.  இரவு 9:00 மணிக்கு அலங்கரித்த வாகனத்தில் அம்மன் வீதியுலா நடக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !