நரசிம்மர் கோயிலில் கடிகை!
ADDED :3436 days ago
வேலுõர் மாவட்டத்திலுள்ள சோளிங்கர் தலத்தை சோளசிம்ஹபுரம் என்று முற்காலத்தில் அழைத்தனர். பிறகு சோளலிங்கபுரம் ஆகி, சோளிங்கர் ஆகி விட்டது. இங்குள்ள மலையை கடிகாசலம் என்பர். கடிகா என்றால் நாழிகை. சலம் என்றால் மலை. இங்குள்ள நரசிம்மரை வணங்கி, ஒரு நாழிகை நேரம் (24 நிமிடம்) தங்கினாலே போதும். அங்குள்ள நரசிம்மரின் அருளால் எல்லா நன்மைகளும் கிடைத்து விடும். தீயசக்திகள் பறந்து விடும்.