உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐந்து லட்சம் மல்லிகை பூ வில் சுவாமிக்கு பூப்பல்லக்கு!

ஐந்து லட்சம் மல்லிகை பூ வில் சுவாமிக்கு பூப்பல்லக்கு!

சிங்கம்புணரி: சிங்கம்புணரி சேவுகப்பெருமாள் அய்யனார் கோயில் வைகாசி விசாக திருவிழாவில் ஐந்து லட்சம் மல்லிகை பூவில் அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் சுவாமி திருவீதி உலா நடந்தது.பத்து நாள் திருவிழா நிறைவாக, நேற்று முன்தினம் இரவு, மதுரையிலிருந்து 5 லட்சம் மல்லிகை பூக்கள் கொண்டு வந்து பல்லக்கை அலங்கரித்து, மின் விளக்குகள் பொருத்தப்பட்டன. பூப்பல்லக்கில் இரவு 1 மணிக்கு கோயிலிலிருந்து பூரணாதேவி, புஷ்கலாதேவி சமேத சேவுகப் பெருமாள் சுவாமி புறப்பட்டார். நான்கு ரதவீதி வழியாக வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். காலை 6 மணிக்கு சுவாமி சேர்க்கையானார். பூஜை, ஆராதனைகளுடன் விழா நிறைவு பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !